நாட்டில் மேலும் 198 பேர் கொவிட் தொற்றால் மரணம்

நாட்டில் மேலும் 198 பேர் கொவிட் தொற்றால் மரணம்

நாட்டில் மேலும் 198 பேர் கொவிட் தொற்றால்மரணித்துள்ளதாக நேற்று(24) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்  இன்று (25)வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,948  ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 119 ஆண்களும், 79 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் 30 வயதுக்கு குறைவான ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிக்கப்பட்டுள்ளது.