மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் கொவிட் நோயாளர்கள் ஆபத்தில்
மயக்க மருந்து செலுத்தப்பட வேண்டிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளில் பற்றாக்குறை நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண தலைவர் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை மாகாண பொது மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை காணப்படுவதாக தெரியவந்ததையடுத்து, ஏனைய மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது தெரியவந்துள்ளது.
கொவிட் தொற்றினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், கொவிட் தொற்றாளர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.