நேற்று 52,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது
தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 52,417 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 6,849 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 14,110 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் 890 பேர் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியினை நேற்று பெற்றுள்ளதுடன், 87 பேர் இரண்டாம் தடுப்பூசியினையும் நேற்று பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொடர்னா தடுப்பூசி 15 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதோடு, 30,274 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, 180 பேர் பைஸர் தடுப்பூசியை இரண்டாவது தடவையாக நேற்று பெற்றுள்ளனர்.
இதன்படி, நாட்டில் 95 இலட்சத்து 84 ஆயிரத்து 978 பேருக்கு சைனோபாஃம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், 44 இலட்சத்து 14 ஆயிரத்து 527 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.