யாழில் ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம்-பளை-வேம்படி பகுதியில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காங்கேசன்துறை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 52.680 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது.
மேலும் குறித்த கஞ்சா தொகையை கொண்டு செல்ல பயன்படுத்திய மீன்பிடி படகொன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சோதனையின் போது சந்தேக நபர்கள் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.