முகக்கவசங்களை சுற்றாடலுக்கு விடுவிக்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை

முகக்கவசங்களை சுற்றாடலுக்கு விடுவிக்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை

 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சுற்றாடலுக்கு விடுவிக்கும் நபர்களை கைது செய்யுமாறு சுற்றாடல் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உரிய முறைமைகள் இன்றி சுற்றாடலுக்கு அவற்றை விடுவிப்பதனால் ஏற்படுகின்ற மோசமான நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, முகக்கவசங்களை சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுவதை கட்டுப்படுத்தும் பொறுப்புகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.