கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று முற்பகல் 10 மணிமுதல் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை, அல்விஸ் நகரம், வெலிக்கந்த முல்லை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹூனுப்பிட்டி ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அதேநேரம், கிரிபத்கொடை புதிய வீதி, புளியாவத்தை வீதி மற்றும் அக்பர் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.