
யாழில் மின்சார ஒழுக்கு காரணமாக கடையொன்று எரிந்து நாசம்
யாழ். கே.கே.எஸ் வீதிக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகக் கடை முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடையில் வேலை செய்தவர்கள் மதிய உணவிற்காகச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது மின்சாரத்தினால் கடை எரிந்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதில் ரூபா 20 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். மாவட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025