மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன

மன்னார் - வங்காலை கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7 மீனவர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில் அவர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என அந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.வினோதன் தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த போது இந்திய மீனவர் ஒருவரின் படகு பழுதடைந்துள்ள நிலையில் அவருக்கு உதவி வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.வினோதன் குறிப்பிட்டார்.