காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் ஐவர் பலி (காணொளி)

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் ஐவர் பலி (காணொளி)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள்  ஏற முயற்சித்த போதே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்க இராணுவம் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது இந்த மரணங்கள் ஏற்பட்டதா? அல்லது நெரிசலில் சிக்கி அவர்கள் பலியானார்களா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.