ஈரானின் மின் நிலையங்கள் மீது சக்திவாய்ந்த தாக்குதல்கள்! விரைவில் போர் நிறைவு பெறும்! ட்ரம்ப் அதிரடி

ஈரானின் மின் நிலையங்கள் மீது சக்திவாய்ந்த தாக்குதல்கள்! விரைவில் போர் நிறைவு பெறும்! ட்ரம்ப் அதிரடி

ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (01) இரவு 9 மணிக்கு வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி, 

ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் "கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன" என்றும், அடுத்த 2 - 3 வாரங்களுக்குள் ஈரானின் அனைத்து மின் நிலையங்கள் மீதும் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இந்தப் பெரும் தாக்குதல்கள் ஈரான் மீண்டும் 'கற்காலத்திற்கு' இழுத்துச் செல்லும் என்று அவர் எச்சரித்தார். 

அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட பல இராணுவ தாக்குதல்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகவும், எஞ்சிய பணியை நிறைவு செய்வதற்கு மிகக் குறைந்த காலமே தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

மேலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், அந்நாட்டின் உட்கட்டமைப்பு முற்றிலுமாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.