சப்ரகமுவவிலும் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

சப்ரகமுவவிலும் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

சப்ரகமுவ மாகாணத்திலும் வாகன வருமான  அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

மாகாண பிரதம செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செப்டெம்பர் 15ஆம் திகதி வரையில் இந்த செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இணையத்தளம் ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பங்களை வழமை போன்று முன்னெடுக்க முடியும்.

அத்துடன் இணையம் ஊடாக விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக வாகன வருமான அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை 60 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளதெனவும் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.