வட மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோரில் 77.5 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி

வட மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோரில் 77.5 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி

வட மாகாணத்தில், 30 வயதிற்கு மேற்பட்டோரில் 77.5 சதவீதமானோருக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

23 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கவேண்டி உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.