யாழில் அதிகாரி ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்! 7ஆவது நபரும் சிக்கினார்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுற்றுச்சூழல் அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சுன்னாகம் பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 06 பேரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக யாழ். மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி மீது கடந்த 8ஆம் திகதி முற்பகல் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் அதிகாரியைப் பின்தொடர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.