முன்னிலை சோஷலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உட்பட இருவர் விளக்கமறியலில்
கைது செய்யப்பட்ட முன்னிலை சோஷலிச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றுக்கு நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறையில் ஈடுபட்டமை மற்றும் மஹரகம காவல்நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த மஹரகம காவல்நிலைய பொறுப்பதிகாரி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.