கந்தக்காடு முகாமிலிருந்தவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பம்
கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை காரணமாக, மேலும் பலர் தனிமைப்படுத்தப்படலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை பார்ப்பதற்காக சென்றவர்கள் தொடர்பாக, அதிகாரிகள் தகவல் சேகரிக்கும் நடவடிக்கையில் மேலும் ஈடுபட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுப்பிலிருந்த 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.