யாழில் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு நாளை கொவிட் தடுப்பூசி!

யாழில் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு நாளை கொவிட் தடுப்பூசி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைய தினம் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, கோப்பாய், மருதங்கேணி, நல்லூர், பருத்தித்துறை, தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்றைய தினம் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன.

இதற்காக 50,000 தடுப்பூசிகள் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றதாக முல்லைத்தீவு மாவட்ட தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய், வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டன.