
வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்தை மீள்பரிசீலிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்!
வடமாகாண பிரதம செயலாளர் நியமனத்தை மீள்பரிசீலிக்குமாறு, வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளனர்.
தமிழ் பேசும் ஒரு அதிகாரியை வட மாகாண பிரதம செயலாளராக நியமிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடமாகாண பிரதம செயலாளராக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரான சமன் பந்துலசேன, ஜனாதிபதியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டமை தொடர்பில், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.
இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.