
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவி விலகுவதாக அறிவிப்பு!
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதியுடன் தாம் பதவியில் இருந்து விலகுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அந்தக் கட்சியின் நகரசபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் தமிழ் தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அதனுடன் இணைந்து செயற்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகரசபைத் தலைவராகத் தொடர விரும்பாத காரணத்தினால் தாம் பதவி விலகுவதாக தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கடிதம் மூலம் அறிவித்திருந்ததை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.