பொலிஸாரின் புதிய திட்டம்

பொலிஸாரின் புதிய திட்டம்

சமூக பொலிஸ் பிரிவு மூலம் கிராம அளவில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டத்தை செயல்படுத்த பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன் ஆரம்ப திட்டம் மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக பொலிஸ் பிரிவுகள் ஊடாக குற்றத் தடுப்பு பொலிஸாரின் சேவையை நேரடியாகச் வழங்குவதே இதன் நோக்கம் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.