சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை - 3 படகுகளுடன் மூவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகினையும், மீனவர்களையும் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளார்கள்.
நேற்று (15) மாத்தளன் பகுதியில் கடலில் சட்டத்திற்கு முரணான வகையில் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மாத்தளன் பகுதியினை சேர்ந்த மூன்று மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளார்கள்.
குறித்த மீனவர்களுக்கு தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்காக மன்று தண்டப்பணம் விதித்து மூவரையும் விடுதலை செய்துள்ளது.