யாழில் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்!

யாழில் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவின் ஆதிகோவிலடி கிராமம் நேற்று (15) மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில். 48 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.