நகர சபையின் செயலாளரை தாக்க முற்பட்ட நபர் கைது - CCTV காணொளி
வத்தள - மாபோல நகர சபையின் செயலாளரான பெண்ணை தாக்க முற்பட்ட நகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகர சபையின் செயலாளரான தீபானி தில்ருக்ஷியை சந்திக்க நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் லெனார்ட் ரோஹண என்பவர் கடந்த 7 ஆம் திகதி வருகை தந்திருந்தார்.
இதன்போது நகர சபையின் செயலாளர், நகர சபை தலைவருடன் zoom கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததால் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து லெனார்ட் ரோஹண என்பவர் அவரை தாக்க முற்பட்டுள்ளார்.
நகர சபையின் செயலாளரின் லெப்டெப் கணிணியையும் தூக்கி கீழே அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் நகர சபை உறுப்பினர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.