அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் மீள ஆரம்பம்!

அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் மீள ஆரம்பம்!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் 14ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்ட பயணத்தடை கடந்த 10ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.