ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

17 பிடியாணைகள் மற்றும் 32 வழக்குகளுடன் தொடர்புடைய பெண்ணொருவர் நவகமுவ - கொரதொட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹியோவிட்ட பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர் தொடர்பில் நவகமுகவ காவல்துறைக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இவர், ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில இருந்து தெரியவந்துள்ளது.