
யாழில் 28 வயது நபர் உயிரிழப்பு!
கடந்த மாகாண சபை தேர்தலில் பிரதேச சபைக்கு போட்டியிட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.