யாழில் 23 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

யாழில் 23 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெரிவில் எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த 23 பேரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.