மேலும் 551 பேருக்கு கொவிட்: இதுவரை இன்று 1,229 தொற்றாளர்கள்!

மேலும் 551 பேருக்கு கொவிட்: இதுவரை இன்று 1,229 தொற்றாளர்கள்!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 551 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக 678 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1, 229 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 268,662 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, அவ்வாறே, கொவிட் தொற்றில் இருந்து இன்று மேலும் 1, 472பேர் குணமடைந்தனர்.

இதன்படி இதுவரையில் 238,131 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 38 பேர் மரணித்ததாக நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், கொவிட் தொற்றுக்குள்ளான 27, 180 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.