ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்து
லொறி ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளர்.
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்று (26) முற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பொகவந்தலாவையில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறியும், ஹட்டனில் இருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற வேனுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அதன் சாரதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.