இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ள தன்னியக்க கிருமி தொற்று நீக்கும் இயந்திரம்

இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ள தன்னியக்க கிருமி தொற்று நீக்கும் இயந்திரம்

இராணுவத்தின் ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு தயாரித்துள்ள,  இரு கைகளையும் கிருமித் தொற்று நீக்கும் தன்னியக்க இயந்திரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த இயந்திரத்தில், நான்கு லீற்றர் திரவத் தொற்று நீக்கியைக் களஞ்சியப்படுத்தி, 600 பேர்களின் இரு கைகளையும் கிருமித் தொற்றுநீக்க முடியும்.

இந்த இயந்திரம் 48 மணித்தியாலம் தானாகச் செயற்படக்கூடிய இயலுமையைக் கொண்டுள்ளது.

இறக்குமதி செய்வதற்கு பதிலாக, குறைந்த செலவில் இந்த இயந்திரத்தை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என இராணுவ ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, கிடைக்கும் கொள்வனவு கட்டளைக்கு ஏற்ப இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கும் இது பற்றிய அறிவை தேவையானவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும் தயாராகவுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது