
மணல் கொள்ளையர்களுடனான மோதலில் அதிரடிப்படையினர் 4 பேர் காயம்
யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கும் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இன்று அதிகாலை மோதல் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் நான்கு விசேட அதிரடிப் படையினர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அரியலைக் கிழக்குப் பகுதியில் மணல் கொள்ளையில் குழு ஒன்று ஈடுபட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்தப்பகுதிக்கு காவல்துறை விசேட அதிரடிப் படையினர் விரைந்திருந்தனர்.
அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட குழுவை அதிரடிப் படையினர் கைது செய்ய முற்பட்ட போது, கொள்ளையர்கள் அவர்கள் மீது மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகரணங்களால் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அதிரடிப் படையினர் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளைத் தப்பி சென்றவர்களில் இருவரைத் துரத்திச் சென்று கைது செய்தனர். தப்பிச் சென்ற ஏனையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.