777 கிலோ உலர்ந்த மஞ்சள் தீயிட்டு அழிக்கப்பட்டது!

777 கிலோ உலர்ந்த மஞ்சள் தீயிட்டு அழிக்கப்பட்டது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகள் நேற்று (5) மாலை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மன்னார் காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட குறித்த உலர்ந்த மஞ்சள் மூடைகள் இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.

இதன் போது 28 மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 777 கிலோ 600 கிராம் உலர்ந்த மஞ்சள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் தாரபுரம் காட்டுப் பகுதியில் வைத்து மன்னார் காவல்துறையினரால் குறித்த மஞ்சள் மூடைகள் தீயிட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.