10 மாவட்டங்களுக்கு ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்!

10 மாவட்டங்களுக்கு ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்!

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் 10 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் முழுவதும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அதிக அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளில் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.