சர்வதேச போதைப்பொருள் கடத்தல் - குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 இலங்கையர்கள் கேரளாவில் கைது!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் - குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 இலங்கையர்கள் கேரளாவில் கைது!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர், கேரளா, அங்கமாலி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் படையணியினால் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போலி அடையாள அட்டைகளுடன் கேரளா, அங்கமாலி - கிடங்கூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.