நேற்று 1,864 பேருக்கு கொவிட் தொற்று!

நேற்று 1,864 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,864 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

புத்தாண்டுக் கொத்தணியில்1,786 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியிருந்த 78 பேருக்கும் நேற்று தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தொற்று உறுதியானவரக்ளின் மொத்த எண்ணிக்கை 259,089 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 30,107 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் மேலும் 2,481 பேர், நேற்று கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 225,952 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.