
யாழில் மீண்டும் வன்முறைக் கும்பல் அடாவடி
கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்து உடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.