எக்ஸ்ட்ரா செனகா இரண்டாவது டோஸ் - 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி

எக்ஸ்ட்ரா செனகா இரண்டாவது டோஸ் - 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி

கொவிஷீல்ட் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா கொவிட் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொற்று நோய் தொடர்பான விசேட நிபுணர் குழுவினால் இதற்கான அனுமதி இன்று பிற்பகல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகளும் மற்றும் ஒரு மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் இந்நாட்டிற்கு கிடைக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.