பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு முன்னோர்கள் பூலோகம் வந்து 15 நாட்கள் தங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் மற்ற வழிபாடுகளை குறைத்துக் கொண்டு, பிதுர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
வளர்பிறையான சுக்ல பட்சம் தேவதைகள் வழிபாட்டிற்கும், தேய்பிறையான அமரபட்சம் (கிருஷ்ணபட்சம்) முன்னோர்களான பிதுர்வழிபாட்டிற்கும் உகந்தது ஆகும். வருடத்தில் 12 கிருஷ்ண பட்சங்கள் வந்தாலும், அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் பிறந்து, பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும், திருமணம், குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி நின்று கொண்டாடுவது போல, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வந்து தன் வாரிசுகளை நேரில் கண்டு வாழ்த்தும் காலமே மகாளயம் என கருதப்படுகிறது.