
நாட்டில் மேலும் சிலப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
நாட்டில் மேலும் சிலப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் கேகாலை மாவட்டத்தின் 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இம்மாவட்டத்தின் அல்கொட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஹிகுலோய,மஹவத்த,ஹலமட ஆகிய பகுதிகளும் டென்ஸ்வோர்த் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாஹென கிராம சேவகர் பிரிவு இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.