சம்பந்தனுக்கு ஜனாதிபதி கடிதம் - அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் த.தே.கூ தீர்மானமில்லை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த 16ஆம் திகதி இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதியினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சந்திப்பு விரைவில் நடைபெறும் என ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அதன் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.