வனத்துறை அதிகாரிகளின் கெப் மீது காட்டு யானைகள் தாக்குதல்!
கிராந்துருகோட்டே பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று கிராமத்தினுள் புகுந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கிராந்துருகோட்டை காட்டு யானை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது, குறித்த அதிகாரிகள் பயணித்த கெப் வாகனத்தை காட்டு யானைகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் கெப் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரிகம, ஸ்வசக்திபுர, பாடசாலை பிரதேசம், வடரவும வீதி, வைத்தியசாலை பிரதேசம் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு குறித்த காட்டு யானைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.