கொழும்பு மாவட்ட கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்தது!
கொழும்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன், நாட்டில் நேற்று தொற்றுறுதியான 2,093 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொவிட்-19 தொற்று பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் தொற்றுறுதியான 364 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் நேற்று 322 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 470 ஆகவும், கம்பஹா மாவட்டத்தில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 565 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை,களுத்துறை மாவட்டத்தில் 292 பேருக்கும், கண்டியில் 190 பேருக்கும் நேற்று கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது.
குருணாகலில் 82 பேருக்கும், காலியில் 49 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 78 பேருக்கும், கேகாலையில் 70 பேருக்கும், புத்தளத்தில் 55 பேருக்கும், அனுராதபுரத்தில் 15 பேருக்கும், மாத்தறையில் 62 பேருக்கும், பொலன்னறுவையில் 11 பேருக்கும், அம்பாறையில் 19 பேருக்கும், நுவரெலியாவில் 148 பேருக்கும், இரத்தினபுரியில் 43 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 11 பேருக்கும், பதுளையில் 41 பேருக்கும், மட்டக்களப்பில் 136 பேருக்கும், மொனராகலையில் 4 பேருக்கும், கிளிநொச்சியில் 9 பேருக்கும், முல்லைத்தீவில் 5 பேருக்கும், திருகோணமலையில் 40 பேருக்கும், மாத்தளையில் 22 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் மன்னாரில் 2 பேருக்கும் கொவிட் தொற்றுறுதியானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.






