சைனோஃபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பெற்றுக் கொண்டனர்!

சைனோஃபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பெற்றுக் கொண்டனர்!

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் கீழ் 14 இலட்சத்து 48 ஆயிரத்து 601 பேருக்கு சைனோஃபாம் தடுப்பூசி முதலாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் 4 இலட்சத்து 70 ஆயிரத்து 870 பேர் இரண்டாம் செலுத்துகையை பெற்றுள்ளனர்.

அத்துடன் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 454 பேர் முதல் தடவையாக ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

அவர்களில் 14 ஆயிரத்து 323 பேர் இரண்டாவது தடவையாக ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய தினம் 385 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 3 இலட்சத்து 72 ஆயிரத்து 675 பேர் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் செலுத்துகையை பெற்றுக் கொண்டுள்ளனர்.