15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

கடந்த 2 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணித்த 15 பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார வழிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை அடையாளம் காண்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்று (23) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சீருடை அணியாத காவல்துறையினர் பொதுமக்களை போன்று பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.