சபுகஸ்கந்தை உராய்வு எண்ணெய் நீரில் கலந்ததால் பாதிப்புற்ற 45 பேருக்கு நட்டஈடு!
அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உராய்வு எண்ணெய் நீரில் கலந்தமையினால் பாதிக்கப்பட்ட 45 பேருக்கு நட்டஈடு வழங்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரைகள் நேற்று (21) அமைச்சருக்கு கையளிக்கப்பட்டன.
இதற்கமைய 45 பேருக்கு 19 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.