கொவிட் ஒழிப்புக்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் இன்று முன்வைப்பு

கொவிட் ஒழிப்புக்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் இன்று முன்வைப்பு

கொவிட்- 19 ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை இன்று (22) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் நாளை (23) நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.