நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வின் பின்னரான வாகன விபத்துக்களில் 11 பேர் பலி!

நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வின் பின்னரான வாகன விபத்துக்களில் 11 பேர் பலி!

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதில் 8 பேர் நேற்று (21) இடம்பெற்ற விபத்துகளால் உயிரிழந்தவர்கள் எனவும், ஏனைய 3 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில் பாதசாரிகள் 2 பேரும், உந்துருளிகளில் பயணித்த 6 பேரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த 2 பேரும், பாரவூர்தியில் பயணித்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், பாதசாரிகள் மற்றும் சிறிய ரக வாகனங்களில் பயணிப்பவர்களே அதிகளவில் விபத்துக்களால் உயிரிழப்பதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.