மாதிவெல பகுதியில் பயணக் கட்டுப்பாடு

மாதிவெல பகுதியில் பயணக் கட்டுப்பாடு

மாதிவெல, பிரகதிபுர பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று உள்ளாக ஏற்பட்டுள்ள சந்தேகம் காரணமாக அப்பகுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அப்பகுதிக்கு எந்த நபரும் உள்நுழையவோ அல்லது அப்பகுதியில் இருந்து வௌியேறவோ முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

டெல்டா வகை வைரஸ் தொற்றாளர் என சந்தேகக்கும் தொற்றாளர் ஒருவரும் அண்மையில் அப்பகுதியில் இனங்காணப்பட்டிருந்தார்.
அத்துடன் குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.