மாதிவெல பகுதியிலும் டெல்டா வகை கொவிட் வைரஸ் ?

மாதிவெல பகுதியிலும் டெல்டா வகை கொவிட் வைரஸ் ?

மாதிவெல, பிரகதிபுர பகுதியில் கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக சுகாதார அமைச்சின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதார பிரிவு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதார அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.