போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 3 அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 3 அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

போதைப்பொருள் கடத்தல் குழுவினருடன் இணைந்து, போதைப்பொருள் வரத்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்ட காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 3 அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும், ஒன்றரை ஆண்டுகளாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் தொடர்பான வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உப காவல்துறை பரிசோதகர் ஒருவரும், சார்ஜன்ட் ஒருவரும், கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், முன்னதாக கைதுசெய்யப்பட்டிருந்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் 15 பேர் உட்பட 20 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.