
ஆசிரியரை அஞ்சலித்த புனித பத்திரிசியார் கல்லூரி
யாழ் மாவட்ட கிறீஸ்தவர்களிடையே பெரும் துயரை ஏற்படுத்திய சமுக சேவையாளரும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பிரபல ஆசிரியருமான மேரி மல்லிகாவின் உயிரிழப்பை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இணையவழி அஞ்சலி நிகழ்வு குறித்த கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டது.
கல்லூரியின் இயக்குனர் அருட்தந்தை தேவமகன் தலைமையில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் பலர் பங்குபற்றி இருந்ததுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
குறித்த கல்லூரியில் 35 வருடம் பணிபுரிந்து பல அருட்தந்தையர்களின் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த இவர் கடந்த 13 ஆம் திகதி கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.